மாம்பழமோ? மாபெரும் பழமோ?... யாருக்கு ஓட்டு பார்த்திபன் அதிரடி

வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தனக்கே உரிய பாணியில் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

news18
Updated: April 16, 2019, 12:04 PM IST
மாம்பழமோ? மாபெரும் பழமோ?... யாருக்கு ஓட்டு பார்த்திபன் அதிரடி
நடிகர் - பார்த்திபன்
news18
Updated: April 16, 2019, 12:04 PM IST
தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தல் களத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வந்தனர்.


இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தனக்கே உரிய பாணியில் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,
தேர்தல்=தேத்துதல்(பணம்)

Loading...

வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள் என்பதையும் தனது மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள்”Photos: அழகில் ரசிகர்களை ஈர்க்கும் அஜித் பட நடிகை

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...