காடுவெட்டி குருவாக நடிக்கும் பாலா பட வில்லன்

மறைந்த வன்னியர் சங்க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.

காடுவெட்டி குருவாக நடிக்கும் பாலா பட வில்லன்
காடுவெட்டி குரு
  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. இதில் குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்க, சாதிக் இசையமைக்கிறார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ்இதுகுறித்து நாம் ஆர்.கே.சுரேஷை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கதை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். சோலை ஆறுமுகம் என்ற இயக்குநர் இயக்குகிறார். நல்ல டீம். கொரோனா பிரச்னை முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
மேலும் பேசிய அவர், பாலா இயக்கத்தில் தான் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், சைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும், சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

திரைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில் இன்று அவருக்கு தமிழக பாஜகவின் ஓபிசி (OBC) அணி மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading