• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்

புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்

புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்

புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா - எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • Share this:
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த புனித் ராஜ்குமார், கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 46 வயதே ஆகும் புனித்தின் மரணம் மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    புனித்தின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் அவரது இறுதி சடங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்று மாலை புனித் ராஜ்குமாரின் மகள் ட்ரித்தி ராஜ்குமார் வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த இறுதிச் சடங்கில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா - எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதல்வர் பசவராஜ் பொம்மை புனித்தின் நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினார்.

    Actor Puneeth Rajkumar body was laid, puneeth rajkumar age, puneeth rajkumar wife, puneeth rajkumar son, puneeth rajkumar instagram, puneeth rajkumar brother, puneeth rajkumar death, புனித் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மரணம், புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம், புனித் ராஜ்குமார் படங்கள்
    புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்


    புனித்தின் தந்தை, தாய் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ கனடிர்வா ஸ்டுடியோ அருகிலேயே முழு அரசு மரியாதையுடன் புனித்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: