Home /News /entertainment /

நடிகர் பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் ஓ.டி.டி. தேதி ரிலீஸ் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் ஓ.டி.டி. தேதி ரிலீஸ் அறிவிப்பு

கடுவா படத்தில் பிருத்விராஜ் - விவேக் ஓபராய்

கடுவா படத்தில் பிருத்விராஜ் - விவேக் ஓபராய்

1990- களில் ஒரு எஸ்டேட் உரிமையாளரான கடுவாகுன்னேல் குறியாச்சன் (பிருத்விராஜ்), ஐஜி ஜோசப் சாண்டியுடன் (விவேக் ஓபராய்) மோதும் சம்பவங்கள்தான், இந்த கடுவா படத்தின் கதை.

    நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ள இந்த மலையாள அதிரடி திரைப்படம், கடந்த ஜூலை 7 அன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், திரையரங்குகளில் லாபம் ஈட்டிய இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    கடுவா தனது மனதிற்கு நெருக்கமான படம் என்றும், இதன் ஓ.டி.டி. வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பிருத்விராஜ் சுகுமாரன் கூறியுள்ளார்.

    ‘கடுவா’ திரைப்படம் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "மலையாள சினிமா உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் இருந்து அதிக அன்பைப் பெற்றுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானதும் கடுவா திரைப்படம் அதே அன்பையும் பாராட்டையும் பெறும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

    1990- களில் ஒரு எஸ்டேட் உரிமையாளரான கடுவாகுன்னேல் குறியாச்சன் (பிருத்விராஜ்), ஐஜி ஜோசப் சாண்டியுடன் (விவேக் ஓபராய்) மோதும் சம்பவங்கள்தான், இந்த கடுவா படத்தின் கதை.

    இருவருக்குமான கடும் போட்டியையும், அதன் காரணமாக நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளையும் இயக்குனர் ஷாஜி கைலாஷ் விறுவிறுப்புடன் கூறியிருப்பார்.

    கார்த்தியின் விருமன் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

    படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் கூறுகையில், “எனது கேரியரில் தனித்துவமான வேடங்களில் நடிக்க நான் எப்போதும் முயற்சி செய்து வருகிறேன். கடுவா படத்தில் ஜோசப்பின் கதாபாத்திரம் அதற்கு ஒரு உதாரணம். இந்தப் படத்துக்கும், என் கதாபாத்திரத்துக்கும் கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அமேசான் பிரைம் வீடியோ மூலம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடுவா படம் சென்றடையும். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Mollywood

    அடுத்த செய்தி