பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு - காரணம் என்ன தெரியுமா?

பிருத்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு - காரணம் என்ன தெரியுமா?
நடிகர் பிருத்விராஜ்
  • News18
  • Last Updated: November 9, 2019, 3:00 PM IST
  • Share this:
நடிகர் பிருத்விராஜின் விலையுயர்ந்த சொகுசு காரை பதிவு செய்ய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான நடிகர்கள் விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு பிரியர்களாக இருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் பிருத்விராஜ் விலையுயர்ந்த லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்காக அவர் கேரளாவில் செலுத்த வேண்டிய முழு வரியையும் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரூ.1.64 கோடி மதிப்புள்ள காரை அந்தக் காரை பதிவு செய்வதற்காக கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். அதில் காரின் விலையை ரூ. 1.34 கோடி என குறிப்பிட்டிருந்தனர்.


ஆனால் அந்தக் காரின் மதிப்பு ரூ.1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிருத்விராஜின் காரை பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள், காரின் உண்மையான விலையைக் குறைத்துக் காட்டியதால் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்