ஆடு மேய்க்கும் நங்கம்மாளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளித்த பிருத்விராஜ்..!

ஆடு மேய்க்கும் நங்கம்மாளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளித்த பிருத்விராஜ்..!
  • Share this:
தனது கணீர் குரலால் மலையாள கரைகளைக் கடந்து உலகம் முழுக்க இசை பிரியர்களை கட்டிப் போட்டிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி நங்கம்மா. அவரின் வசீகரிக்கும் குரலுக்கு மயங்கிக் கிடக்கிறது மலையாள திரையுலகம்.

சினிமாவில் சாதிக்க வேண்டுமென்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி இரவு பகலாக உறக்கமின்றி வாய்ப்புக்காக அலுவலகம் அலுவலமாகப் சுற்றித்திரிந்து வெற்றியின் படிகள் ஏறியது முன்பொரு காலம். ஆனால் இப்போதோ, இணையத்தின் உதவியால் திறமையாளர்களின் கதவுகளை வாய்ப்பே தேடி வந்து தட்டுவது அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் வீதிகளில் உதவி கேட்டு பாடி வந்த ராணு மண்டலின் குரலை முகம் தெரியாத ஒருவர் இணையத்தில் பதிவேற்ற ஒற்றை இரவில் ஒட்டுமொத்த தேசத்தின் பேசுபொருளாக மாறிய ராணு மண்டல் ஹிமேஷ் ரேஷ்மையா இசையில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.


இதேபோல, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த திருமூர்த்தி பாடிய கண்ணானக் கண்ணே பாடலை விளையாட்டாக இணையத்தில் சிலர் பதிவேற்ற திருமூர்த்தியை இசையமைப்பாளர் இமான் தேடிப்பிடித்துப் பாடும் வாய்ப்பை அளித்தார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அட்டப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் என்ற 60 வயது மூதாட்டியின் குரல் அந்தப் பகுதி முழுவதும் பிரபலம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மங்கம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டே பாடும் பாடலுக்கு அட்டப்பாடி கிராமமே மயங்கிக் கிடந்த நிலையில் அவரது குரல் தற்பொழுது ஒட்டுமொத்த கேரளத்தையும் எட்டிப் பிடித்திருக்கிறது.

நங்கம்மாள் குறித்து வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவ, இதனைப் பார்த்த மலையாள நடிகர் பிருத்விராஜ் அவரது இயக்கத்தில் தயாராகியுள்ள அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் கலக்காத என்ற பாடலை பாட வைத்துள்ளார்.சென்னையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டியோ ஒன்றில் நங்கம்மாள் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் சினிமாவைத் தேடிப் போகவில்லை என்றும் தன்னைத் தேடி சினிமா வந்துள்ளதாகவும் கூறுகிறார் நங்கம்மாள்.

நங்கம்மா பாடிய பாடலுக்கு, அவர் இயல்பாய் ஆடு மேய்க்கும் காட்சிகளை படக்குழு படமாக்கி வெளியிட இணையதளத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் நங்கம்மாவிற்கு திடீர் என படத்தில் பாட கிடைத்த வாய்ப்பு பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. திரைத் துறையில் புகழ் வெளிச்சம் பெறப் போராடிய காலம் மாறி இன்று எத்தனை வயதானாலும், குறைகளை மறந்து தடைகளை உடைத்து சாதிக்க முடியும் என்ற நிலை சமூக வலைதளங்களால் உருவாகி வருகிறது.

Also see:
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்