TamilRockers: பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்டகாச அப்டேட்!

பிரேம்ஜி

இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். பாடல்களை பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார்.

  • Share this:
    பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகிறது.

    நடிகர்,பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இவர் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் அவரின் நண்பனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்துப் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்திருப்பார் பிரேம்ஜி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே 2015-ல் பிரேம்ஜி நாயகனாக நடித்த மாங்கா என்ற படம் வெளியானது. தற்போது மீண்டும் அவர் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ். இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். பாடல்களை பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார். இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி தீக்சித் நடிக்கிறார்.

    இந்தப் படத்தின் ட்ரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று மாலை வெளியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: