TamilRockers: பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரேம்ஜி

ஒரு கையில் சைக்கிள் செயின், மறுகையில் சாராய பாட்டில், வாயில் சிகரெட் என டெரரான லுக்கில் யாரையும் சிரிக்க வைக்கும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

  • Share this:
    பிரேம்ஜி அமரன் நடித்து, இசையமைத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

    2015-ல் பிரேம்ஜி நாயகனாக நடித்த மாங்கா என்ற படம் வெளியானது. அவர் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ். இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். பாடல்களை பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார். தமிழ் ராக்கர்ஸின் பர்ஸ்ட் லுக்கை பிரேம்ஜி ட்விட்டரில் வெளியிட்டார்.

    இந்த முதல் பார்வையில் ஒரு கையில் சைக்கிள் செயின், மறுகையில் சாராய பாட்டில், வாயில் சிகரெட் என டெரரான லுக்கில் யாரையும் சிரிக்க வைக்கும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தப் படத்தை ஐஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் பிச்சாண்டி என்பவர் தயாரித்துள்ளார். படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்தப் பர்ஸ்ட் லுக்கில் அனைவரையும் கவர்ந்திருப்பது படத்தின் பெயரான தமிழ் ராக்கர்ஸ். தமிழ் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ், புதிய படம் வெளி வந்த அன்றே திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றி வருகிறது. எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அவர்களை கண்டுப்பிடிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. அந்த தமிழ் ராக்கர்ஸ் பெயரை படத்திற்கு வைத்திருப்பதால், இது என்ன கதையாக இருக்கும் என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது.

    ஆனால், நிஜ தமிழ் ராக்கர்ஸை பற்றிய கதையாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: