முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிளாக் சாரி.. இடுப்பு போஸ்... ரம்யா பாண்டியனை பார்த்து வாய் பிளந்த பிரேம்ஜி!

பிளாக் சாரி.. இடுப்பு போஸ்... ரம்யா பாண்டியனை பார்த்து வாய் பிளந்த பிரேம்ஜி!

பிரேம்ஜி - ரம்யா பாண்டியன்

பிரேம்ஜி - ரம்யா பாண்டியன்

மற்ற போட்டியாளர்களைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரம்யாவுக்கும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

  • Last Updated :

ரம்யா பாண்டியன் கறுப்பு நிற சேலையில் எடுத்துக் கொண்ட படங்களுக்கு வாய் பிளக்கும் ஜிஃப் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் நடிகர் பிரேம்ஜி.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதன் பிறகு அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதையடுத்து மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டியவாறு ரம்யா பாண்டியன் வெளியிட்ட படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து யாரிவர் என அவரை கவனிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.

அந்தப் படம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றதென்றால், ரம்யா பாண்டியனை விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆக்கும் அளவுக்கு ஸ்பெஷல். அதனால் தவறாது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரன்னரான ரம்யா, பின்னர் மீண்டும் விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

மற்ற போட்டியாளர்களைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரம்யாவுக்கும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இடையில் சூர்யா தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் கைவிடவில்லை.

மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

இந்நிலையில் கறுப்பு நிற சேலையில் முதுகு தெரியும் படி விதவிதமான போஸில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் ரம்யா. அதற்கு வாய் பிளக்கும் படியான ஒரு ஜிஃப் வீடியோவை கமெண்ட் செய்திருக்கிறார் நடிகர் பிரேம்ஜி. அதற்கு ’டேய் உன்னெல்லாம்’ என்றதோடு தலையில் அடித்துக் கொள்ளும் இரண்டு எமோஜிகளை பதிவிட்டுள்ளார் நடிகர் நிதின் சத்யா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor premji, Actress Ramya Pandiyan, Ramya pandiyan