நான் எப்போதுமே முரட்டு சிங்கிள்தான் - திருமணம் குறித்து பிரேம்ஜி விளக்கம்

news18
Updated: August 22, 2019, 12:23 PM IST
நான் எப்போதுமே முரட்டு சிங்கிள்தான் - திருமணம் குறித்து பிரேம்ஜி விளக்கம்
பிரேம்ஜி அமரன்
news18
Updated: August 22, 2019, 12:23 PM IST
நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் என்று கூறி திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரேம்ஜி.

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’கண்டநாள் முதல்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடித்திருந்தார். ’சென்னை 28’ படத்தின் முதல் பாகத்தில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பதிவில் பிரேம்ஜி பதிவிட்ட கருத்து அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்ற வதந்தி பரவ காரணமாக அமைந்தது. அதில், ஆணும் பெண்ணும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்தார் பிரேம்ஜி.
இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஜாம்பி பட விழாவில் விளக்கமளித்த பிரேம்ஜி, “கேம் ஓவர் என்ற டி-சர்ட் அணிந்து ட்விட்டரில் ஒரு பதிவிட்டேன். கல்யாணம் ஆனால்தான் கேம் ஓவர். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதனால் நிறைய பேரிடம் வாழ்த்துகள் வந்தன. பலர் என்னைத் தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கேட்டார்கள். இன்னும் நான் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்ற டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஜாம்பி படத்துக்கு இசையமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “யோகி பாபுவின் டைமிங் காமெடி அவர் பேசும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாகவே நான் யாஷிகாவின் தீவிர ரசிகன். அது அவர்களுக்கே தெரியும். படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

Loading...

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் `ஜாம்பி' படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். புவன் நல்லன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜாம்பி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து தயாராகும் மெகா பட்ஜெட் படங்கள்First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...