பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்... வித்தியாசமாக வெளியான அறிவிப்பு

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார்.

news18
Updated: July 31, 2019, 1:23 PM IST
பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்... வித்தியாசமாக வெளியான அறிவிப்பு
பிரேம்ஜி அமரன்
news18
Updated: July 31, 2019, 1:23 PM IST
நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’கண்டநாள் முதல்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடித்திருந்தார். ’சென்னை 28’ படத்தின் முதல் பாகத்தில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார். திரைத்துறையில் பன்முகத் தன்மை வாய்ந்த கலைஞராக வலம் வரும் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.


இதுகுறித்த அறிவிப்வை தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வெளியிட்டிருக்கும் பிரேம்ஜி, ஆணும் பெண்ணும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்து தோன்றியுள்ளார்.பிரேம்ஜியின் இந்த ட்வீட்டை பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்!

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...