ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாழ்க்கை ஒரு வட்டம்சார்.. 8 வருடங்களுக்கு பிறகு ட்வீட்டுக்கு ரிப்ளை... பிரதீப்பிடம் வாய்ப்பு கேட்ட பிரேம்ஜி!

வாழ்க்கை ஒரு வட்டம்சார்.. 8 வருடங்களுக்கு பிறகு ட்வீட்டுக்கு ரிப்ளை... பிரதீப்பிடம் வாய்ப்பு கேட்ட பிரேம்ஜி!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேம்ஜி அமரன்

பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேம்ஜி அமரன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கதையை பிரதீப் ஆப் லாக் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்து ப்ரமோட் செய்யும்படி, பல தமிழ் சினிமா பிரபலங்களையும் ட்விட்டரில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

8 வருடங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்து படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி அமரன்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.

2K கிட்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதன் காரணமாக முதல் நாளிலிருந்து லவ் டுடே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் அதிகப்படியான வசூலை ஈட்டி வருகிறது.  இதற்கு பலனாக தற்போது உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்து முன்னேறி வருகிறது.

Also read... சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டான ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளிகி தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கதையை பிரதீப் ஆப் லாக் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்து ப்ரமோட் செய்யும்படி, பல தமிழ் சினிமா பிரபலங்களையும் ட்விட்டரில் டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனும் ஒருவர்.

இந்நிலையில் இப்போது அந்த ட்வீட்களை ரசிகர்கள் வைரல் ஆக்க, பிரேம்ஜி அமரன் பிரதீப்பை டேக் செய்து, “உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor premji