தேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்!

நடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியுள்ளார்.

தேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்!
பிரசாந்த்
  • News18
  • Last Updated: August 16, 2019, 12:07 PM IST
  • Share this:
தேசிய விருதுகளைப் பெற்ற இந்தி படமான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார்.

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த திரைப்படம் ’அந்தாதுன்’.

சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஆவார்.


Also read... இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீங்களா... மதுவிடம் கோபப்பட்ட லாஸ்லியா!

இந்நிலையில் நடிகர் தியாகராஜன் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான உரிமையை வாங்கியுள்ளார்.

இது குறித்து நடிகர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது.நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்றார்.

தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading