மகளின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னா எழுதிய கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் காதலித்து
திருமணம் செய்து கொண்டனர். புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த பல படங்களில் நடித்துள்ளார் பிரசன்னா.
இந்த நட்சத்திர ஜோடிக்கு 2015-ல் விஹான் என்ற மகனும், 2020 ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர். ஆத்யந்தா சமீபத்தில் தனது 2-வது பிறந்த்நாளை கொண்டாடினார். இதையடுத்து பிரசன்னா தனது மகளின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் அழகான கவிதை ஒன்றை பகிர்ந்தார்.
தோளுல தவழுற தாயே,
என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே
என்ற அந்த கவிதையுடன் இன்ஸ்டாகிராமில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரசன்னா. அதோடு மகளின் விதவிதமான
புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
மறுபுறம் சினேகாவோ, ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தேவதையே! எங்கள் வாழ்க்கையை நீ இன்னும் அழகாக்கினாய்! உனக்கு இன்னும் பல மகிழ்ச்சியான நாட்கள் வர வாழ்த்துக்கள்!! நீ மிகவும் நேசிக்கப்படுகிறாய் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்” என்று குறிப்பிட்டு ஒரு அழகான வீடியோவுடன் மகள் ஆத்யந்தாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.