Home /News /entertainment /

எனது கனவு ஒருநாள் நனவாகும்... உணர்ச்சிவசப்பட்ட பிரசன்னா!

எனது கனவு ஒருநாள் நனவாகும்... உணர்ச்சிவசப்பட்ட பிரசன்னா!

பிரசன்னா

பிரசன்னா

நடிகராக வேண்டும் என்று கனவு காண தொடங்கியதில் இருந்தே குதிரை சவாரி செய்யும் போர்வீரன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றிருந்த தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் பிரசன்னா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனது கனவு கதாபாத்திரம் குறித்து நடிகர் பிரசன்னா மனம் திறந்து கூறியுள்ளார்.

    இயக்குனர் கார்த்திக் நரேனின் 'மாஃபியா: அத்தியாயம் 1' படத்தில் கடைசியாக நடித்திருந்த நடிகர் பிரசன்னா, இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30, 2022 அன்று திரைக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை திரையில் பார்க்க ரசிகர்களைப் போலவே பிரசன்னாவும் காத்திருப்பதாக தெரிகிறது.

    பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?

    2002-ல் 'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, நடிகராக வேண்டும் என்று கனவு காண தொடங்கியதில் இருந்தே குதிரை சவாரி செய்யும் போர்வீரன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றிருந்த தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரமின் வீடியோவைப் பகிர்ந்த அவர், தன்னை இப்படித்தான் கனவு கண்டதாகக் கூறியுள்ளார். அதோடு எப்போதாவது அந்த கனவு நனவாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.





    பிரசன்னா தனது கனவைப் பகிர்ந்து கொண்டதற்கு பதிலளித்த நடிகர் சியான் விக்ரம், "நீங்களும் விரைவில் அந்த கனவில் சவாரி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram, Ponniyin selvan, Prasanna

    அடுத்த செய்தி