ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயப்ரியா... எதுவும் மாறாது...! பிரசன்னா வேதனை

ஹேஷ்டேக்குகள் மாறிவிடும். ஆனால் மாறவேண்டிய எதுவும் மாறாது என்று நடிகர் பிரசன்னா வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயப்ரியா... எதுவும் மாறாது...! பிரசன்னா வேதனை
நடிகர் பிரசன்னா
  • Share this:
கொரோனாவின் கோரத்தாண்டவம் ஒருபுறமிருக்க சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் இந்தியாவையே உலுக்கியது. காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அறந்தாங்கியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சர்ச்சையானது. இந்த இரண்டு சம்பவங்களுக்குமே தமிழ்த் திரையுலகினர் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்ரியா அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வரும் வரைதான். அதற்கு பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேக்குகள் மாறிவிடும். ஆனால் மாற வேண்டிய எதுவும் மாறாது. இவை சோர்வை ஏற்படுத்தி விட்டன. சோகம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி” என்று குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
பிரசன்னாவின் இந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் இயக்குநர் சேரன்,"மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு... எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டது" என்று கூறியுள்ளார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading