நடிகர் பிரகாஷ் ராஜ் தனக்கு அறுவை சிகிச்சை நடைப்பெற்று விட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக அறியப்ப நடிகர் பிரகாஷ் ராஜ், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில்
பிரகாஷ் ராஜ் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்காக அவர்
ஐதராபாத் சென்றார்.
தற்போது தனக்கு
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருப்பதாக புகைப்படத்தைப் பதிவிட்டு, ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.