போலி செய்திகளால் பாஜக வன்முறையை பரப்புகிறது - நடிகர் பிரகாஷ்ராஜ்

Web Desk | news18
Updated: November 15, 2018, 5:27 PM IST
போலி செய்திகளால் பாஜக வன்முறையை பரப்புகிறது - நடிகர் பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ் - நடிகர்
Web Desk | news18
Updated: November 15, 2018, 5:27 PM IST
வலதுசாரி அமைப்புகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்திருப்பதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசிய போது, “ சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.


பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றனர்.

குறிப்பாக பாஜக அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகிறது. என்னை இந்துத்வாவிற்கு எதிரானவன் எனச் சித்தரிக்கின்றனர். ஆனால் எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

வதந்திகள் மூலம் பயனடைய வலதுசாரிகள் அமைப்புகள் முயற்சி செய்கின்றன. பொய் செய்திகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். வதந்திகளை நம்பி கும்பல் வன்முறையும் அதிகரித்துள்ளது. முதலில் நாம் மனிதர்கள், பின்னர் நாட்டின் குடிமக்கள் என்ற உணர்வு வேண்டும்

Loading...

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவன் வாழ்கின்ற வாழ்க்கையில் இருக்கிறது. உயரமான சிலையில் அது எப்படி இருக்கும்? படேல் சிலை எப்படி இந்தியாவின் ஒற்றுமையாக இருக்க முடியும். தவறான முறையில் இந்துத்துவாவை பரப்புகின்றனர். படேலின் உயரமான சிலை நாட்டுக்கு தேவையா ? அது எப்படி இந்தியாவின் ஒற்றுமையாக இருக்கும். உயரம் என்பது தன்னுடைய வாழ்க்கை முறையில் இருக்க வேண்டுமே தவிர சிலையில் இருக்க கூடாது” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “இந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி படித்தவர்கள் தான் பாமர மக்களை ஏமாற்றி வருக்கிறார்கள். இன்றைய செய்தித்துறை அனைத்துமே அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. பெரும்பாலான தவறான தகவல்களை அரசு தான் பரப்பி வருகிறது. இவ்வாறான போலி செய்திகளால் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும் இதன் மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற வலதுசாரி அமைப்புகள் முயற்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதனால் சமூகத்தில் வன்முறை பரப்பப்பட்டு வருகிறது.

ஒரு தகவல் நமக்கு கிடைக்கும் போது அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த போலி செய்திகளை தடுப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது” என்று கூறினார்.
First published: November 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...