Home /News /entertainment /

இந்தியில் பேசுபவரை அடிப்பது ஏன்? ’ஜெய் பீம்’ காட்சிக்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்

இந்தியில் பேசுபவரை அடிப்பது ஏன்? ’ஜெய் பீம்’ காட்சிக்கு பிரகாஷ் ராஜ் விளக்கம்

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். ஐ.ஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

    ஜெய் பீம் படத்தில் இந்தி பேசியவரை கன்னத்தில் அடித்த காட்சிக்கு விளக்கமளித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

    நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய இந்தப் படத்தில், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே ‘ஜெய் பீம்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். ஐ.ஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

    திருடுப்போன நகைகளைப் பற்றி விசாரிக்கும் பொருட்டு, அடகுக்கடை வைத்திருப்பவரிடம் பிரகாஷ்ராஜ் விசாரிக்கும் போது, தமிழ் தெரிந்த அந்த கடைக்காரர் இந்தியில் பேசுவார். அவரை பளார் என கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ், தமிழ்ல பேசு என்பார். இந்த காட்சி ஒரு சாராரிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இதற்கு விளக்கமளித்திருக்கும் பிரகாஷ் ராஜ், “'ஜெய் பீம்’ படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்காமல், அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைத்தான் பார்த்தார்கள் என்றால், அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர், கேள்வி கேட்காமல் இருக்க இந்தியில் பேசுவதாக தெரிந்தால், வேறு எப்படி நடந்து கொள்வார்? அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இப்படம் 1990-களை பின்னணியாக கொண்டது. அந்த கேரக்டருக்கு இந்தி திணிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார். முறையான கல்வியைப் பெறாத பழங்குடியினப் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Prakashraj

    அடுத்த செய்தி