இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பும் சேர்ந்து வருது... விஜய்யை செல்லமாக வம்பிழுத்த பிரபல நடிகர்

இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பும் சேர்ந்து வருது... விஜய்யை செல்லமாக வம்பிழுத்த பிரபல நடிகர்
விஜய்
  • News18
  • Last Updated: September 23, 2019, 10:41 AM IST
  • Share this:
பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வைத்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் பாடல் வெளியீட்டு விழா 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், படத்தில் பணியாற்றியவர்கள் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இழப்பு, பேனர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். அது அடுத்த நாளே விவாத பொருளானது. இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணா பேசுனா ஒவ்வொரு வார்த்தையும். ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மறக்காம நன்றி சொல்றதும். அவர் தளபதியா இருக்க இது தான் காரணம். இப்ப கொஞ்ச நாளா குசும்பும் சேர்ந்து வருது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்

Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...