முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு

பிரபு

பிரபு

கடந்த சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர், இன்று மாலை பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை லேட்டஸ்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் அவர் சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதும் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர், இன்று மாலை பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை லேட்டஸ்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபு நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படம் வெளியாகியிருந்தது. இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Hospital