ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று வந்த சசிகலா சில வாரங்களுக்கு முன்னர் விடுதலைப் பெற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் தற்போது அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். நேற்று சமக தலைவர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் எம்.எல்.ஏ-வுமான தனியரசு சசிகலாவை இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன்” என்றார்.
இதையடுத்து நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்தார். பின்னர் அவரிடம் சுதாகரன் அபராத தொகை செலுத்தாதது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரபு, ”சசிகலா நலமுடன் இருக்கிறார். ராம்குமார் பாஜக-வில் இணைந்தற்கு என்னுடைய வாழ்த்துகள், நான் அரசியலில் இல்லை” என்றார்.