நடிகர் பிரபு ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக உடல் எடையைக் குறைக்கும் படம் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒர்ச்சா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர். இதை பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் தற்போது பிரபுவுடன் நடிகர்
ரஹ்மான் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் நம்ப முடியாத அளவிற்கு நடிகர்
பிரபு, உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதையடுத்து
பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக பிரபு தனது உடல் எடையைக் குறைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.