• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 20 கிலோ எடையைக் குறைத்த பிரபு - வைரலாகும் படங்கள்!

20 கிலோ எடையைக் குறைத்த பிரபு - வைரலாகும் படங்கள்!

பிரபு

பிரபு

நீண்ட காலமாக தனது எடையைக் குறைக்க நினைத்த பிரபு, இந்த வரலாற்றுப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக ஒரு மெல்லிய தோற்றத்தை கொண்டு வர கடினமாக உழைத்துள்ளார்.

  • Share this:
    வெகுவாக உடல் எடையைக் குறைத்துள்ள நடிகர் பிரபுவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆரம்பத்தில் இருந்தே கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்தவர் நடிகர் பிரபு. 90-களில் இவர் நடித்த படங்கள் அதிகளவில் வெற்றியைக் குவித்தன. இருப்பினும் நாளடைவில் எடை அதிகரித்த அவர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    இதனால் பிரபுவின் ரசிகர்கள் சற்றே கவலையில் ஆழ்ந்தனர். தற்போது அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக, நடிகர் பிரபு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளார். அவரது இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன், பிரபுவுக்கு அழகான மற்றும் மெலிதான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும், அவர் எடையைக் குறைத்ததற்கு வலுவான காரணம் உள்ளது.

    அறிக்கைகளின்படி, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'அக்னி நட்சத்திரம்', 'அஞ்சலி' மற்றும் 'ராவணன்' ஆகிய படங்களுக்குப் பிறகு மணிரத்னம் - பிரபு இணையும் நான்காவது படம் இது.

    அதனால் நீண்ட காலமாக தனது எடையைக் குறைக்க நினைத்த பிரபு, இந்த வரலாற்றுப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக ஒரு மெல்லிய தோற்றத்தை கொண்டு வர கடினமாக உழைத்துள்ளார். அதனால் தனது அதிக கிலோவை குறைப்பதற்காக சில வழக்கமான உடற்பயிற்சிகளுடன், சில இயற்கை உணவு முறைகளையும் பின்பற்றினார். 64 வயது நடிகரின் தீவிர உடற்பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

    Actor Prabhu lose 20 kg for Mani Ratnam's Ponniyin Selvan, punitha prabhu, aishwarya prabhu, prabhu son, prabhu meaning, prabhu wife, actor prabhu, actor prabhu transformation, aishwarya prabhu, tamil actor prabhu movies list, actor prabhu salary, prabhu wife, actor prabhu lose weight, prabhu weight loss, actor prabhu weight loss, பிரபு, நடிகர் பிரபு, பிரபு எடை குறைப்பு, பிரபு எடை குறைப்பு படங்கள்
    பிரபு


     

    தவிர நடிகை குஷ்புவும் தனது எடையைக் குறைத்து, ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அதனால் சின்னத்தம்பி 2 படத்தை எடுக்க சொல்லி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: