பிரபாஸின் சாஹோ சுதந்திர தினத்தில் ரிலீஸ் இல்லை - புதிய தேதி அறிவிப்பு

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

news18
Updated: July 19, 2019, 12:58 PM IST
பிரபாஸின் சாஹோ சுதந்திர தினத்தில் ரிலீஸ் இல்லை - புதிய தேதி அறிவிப்பு
சாஹோ படத்தில் பிரபாஸ்
news18
Updated: July 19, 2019, 12:58 PM IST
பாகுபலி பட நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷங்கர் - இசான் - லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.


ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30-ம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Loading...

இது குறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடையாததாலும், படத்தின் சண்டைக் காட்சிகளை துல்லியமாக கொண்டு வர முயற்சி செய்வதாலும் படத்தின் பணிகளை முடிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...