ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சோதனையா?! அடுத்த பிரச்னையில் சிக்கிய ஆதிபுருஷ்…

பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சோதனையா?! அடுத்த பிரச்னையில் சிக்கிய ஆதிபுருஷ்…

ஆதி புருஷ்

ஆதி புருஷ்

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் ஏமாற்றத்தை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்திற்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் மே மாதத்தையொட்டி வெளியாகுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பொங்கலாக எதிர்வரும் பொங்கல் அமையவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் – விஜய் படங்கள் பொங்கலுக்கு களம் இறக்கப்படவுள்ளன.

  சோஷியல் மீடியா, ரசிகச் சண்டையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் இப்போதைய சூழலில், இவ்விரு படங்களின் வெளியீடு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதற்கிடையே, பான் இந்தியா ஹீரோவாகா உயர்ந்து நிற்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருந்தது. ராமாயணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில், பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்திருந்தார்.

  WATCH – விஜய் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ப்ளே லிஸ்ட்…

  பொங்கல் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ட்ரால் மெட்டீரியலாக மாறிப் போனது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகளால் இந்த படத்தை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்தனர்.

  ' isDesktop="true" id="831427" youtubeid="HwdJj8lhOo8" category="cinema">

  குழந்தைகள் பார்க்கும் சேனல்களின் லோகோவுடன் ஆதிபுரூஷ் டீசர் காட்சிகளை இணைத்து வந்த மீம்ஸ்கள் வரவேற்பை பெற்றிருந்தன. இவை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கேலி கிண்டல்கள் படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தன. குறிப்பாக இயக்குனர் ஓம் ராவத், இந்த ட்ரால்களால் அதிகம் பாதிக்கப்பட்டார்.

  மோசமான கிராஃபிக்ஸை தூக்கி விட்டு, இன்னும் குவாலிட்டியாக படத்தை கொண்டு வர படக்குழுவினர் முயற்சித்து வருகிறார்களாம். இதனால்தான் படம் பொங்கலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  மகள் இயக்கும் படத்தின் பூஜையில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

  இதையடுத்து 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வரலாம் என்ற முடிவில் படக்குழு இருந்ததாம். ஆனால், தற்போது படத்தில் ஒட்டுமொத்தமாக கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றி வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மேலும் ரூ. 100 கோடிக்கும் மேல் செலவாகும் என்று தெரிகிறது. இதனால் படம் 2023 கோடைக்கு வெளியாக வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபாஸ் படத்துக்கு இப்படியொரு சோதனையா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

  பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் ஏமாற்றத்தை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor prabhas