இன்ஸ்டாகிராமை அதிரவைத்த பிரபாஸ்... பதிவே இல்லாமல் 7.5 லட்சம் ரசிகர்கள்...!

தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பொது வெளியில் பேசாத பிரபாஸின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமை அதிரவைத்த பிரபாஸ்... பதிவே இல்லாமல் 7.5 லட்சம் ரசிகர்கள்...!
நடிகர் பிரபாஸ்
  • News18
  • Last Updated: April 15, 2019, 3:55 PM IST
  • Share this:
இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் பாகுபலி பட நடிகர் பிரபாஸ். இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே 7.5 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

உலகத்தை உள்ளங்கை அளவில் சுருக்கிவிட்டது இணைய வளர்ச்சியும், தொழில்நுட்பமும். இந்த வளர்ச்சி திரைத்துறை பிரபலங்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துவிட்டது என்றே கூறலாம்.

இன்றிருக்கும் உச்ச நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களின் வாயிலாக தங்களது ரசிகர்களுடன் உரையாடத் தொடங்கிவிட்டனர்.


தங்களது படம் தொடர்பான அறிவிப்புகள், படத்துக்கான புரமோஷன்கள் ஆகியவற்றை நடிகர்கள் சமூகவலைதளங்களில் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். ஒரு நட்சத்திரத்தை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களை வைத்து அவர்களின் புகழ் எவ்வளவு என்பதை மதிப்பிடும் காலம் இது.இந்நிலையில் பாகுபலி படத்தின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.இந்த தகவல் அறிந்ததும் சுமார் 7.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் ஒரு பதிவு கூட போடவில்லை. மேலும் தனது முகப்பு படத்தைக் கூட வைக்கவில்லை.

#Exclusive | ’தளபதி 63’ படக்கதை திருட்டு நடந்தது இப்படித்தான் - குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி

தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பொது வெளியில் பேசாத பிரபாஸின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை - வீடியோவிஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்