Prabhas: 7 கோடிக்கு ஆடம்பர கார் - மாஸ் காட்டும் பிரபாஸ்!

பிரபாஸ்

பாகுபலி நடிகர் பிரபாஸ் புதிதாக வாங்கியிருக்கும் ‘லம்போகினி’ கார் தான் இப்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்ட்!

  • Share this:
    பாகுபலி நடிகர் பிரபாஸ் புதிதாக வாங்கியிருக்கும் ‘லம்போர்கினி’ கார் தான் இப்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்ட்!

    ‘பாகுபலி’ தொடர் வரிசைப் படங்களில் அற்புதமான நடிப்பைக் கொடுத்த பிரபாஸ் பின்பு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். கடைசியாக இவரது நடிப்பில் ’சாஹோ’ திரைப்படம் வெளியானது. தற்போது ‘ரதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



    இப்படி தனது அடுத்தப் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் பிரபாஸ், தனிப்பட்ட வாழ்க்கையில் படு பிஸி எனத் தெரிகிறது. ஆம்! தற்போது அவர் ஒரு ஸ்வாங்கி காரை வாங்கியிருக்கிறார். ஆம், லம்போர்கினி அவென்டடோர் காரை வாங்கி மற்ற பிரபலங்களையும், ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    Raashi Khanna: ராஷி கண்ணா தனது அண்ணனுக்கு செய்த ஹோலி பிராங்க் – க்யூட் வீடியோ!

    இதைக் கேள்விப்பட்டதும் எல்லோரும் செய்யும் அடுத்த வேலை இதன் விலையை தேடுவது தான். இந்தியாவில் ஸ்வாங்கி ஆரஞ்சு நிற காரின் விலை, ரூ 5.6 கோடி. ஆனால் மற்ற செலவுகளை சேர்க்கும் போது இந்த காரின் விலை ரூ.6 முதல் 7 கோடி வரும்.

    ஆடம்பர காரான ஸ்வாங்கி ஆரஞ்சு நிற காரின் படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபாஸின் தந்தை பிறந்தநாளில் இந்த கார் வாங்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: