Home /News /entertainment /

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு காலமானார்…

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு காலமானார்…

பரியேறும் பெருமாள் படத்தில் பூ ராமு

பரியேறும் பெருமாள் படத்தில் பூ ராமு

Poo ramu : பரியேறும் பெரும் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து ரசிகர்களை ராமு கவர்ந்தார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கும், கர்ணன் படத்தில் தனுஷுக்கும் பூ ராமு அப்பாவாக நடித்திருப்பார்.

    முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரும்,  நாடக, திரைக் கலைஞருமான 'பூ' ராமு காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னை இராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிர் பிரிந்தது.

    தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு.

    கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இதற்கு முன்பு கமல்  நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணச் செய்தது.

    அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.



    குறிப்பாக பரியேறும் பெரும் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து ரசிகர்களை ராமு கவர்ந்தார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கும், கர்ணன் படத்தில் தனுஷுக்கும் பூ ராமு அப்பாவாக நடித்திருப்பார்.



    தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், இதய பிரச்னை காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



    இந்த நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூ ராமுவின் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி