ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறையா? கார் மீது பயணித்த பவன்கல்யாண்.. கொதிக்கும் இணையவாசிகள்!

ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறையா? கார் மீது பயணித்த பவன்கல்யாண்.. கொதிக்கும் இணையவாசிகள்!

நடிகர் பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண்

இந்த வீடியோவுக்கு மாஸ் பி.ஜி.எம்.களை இணைத்து அவரது ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  படத்தை மிஞ்சும் அளவுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் காரில் சென்றுள்ளார். இதற்கு கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.

  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவரை பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். இவர் ஜன சேனா என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

  தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான இவரது படங்களில், மாஸ் காட்சிகள் தூக்கலாக இருக்கும். இதற்காகவே பவன் கல்யாணை ரசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

  இதேபோன்று தெலுங்கு சினிமா நிகழ்ச்சிகளில் பவன் கல்யாண் பேசும் வீடியோக்கள் வழக்கமாக வைரலாகி விடும். ஆக்ரோசம் நிறைந்த மேடை பேச்சுகளால், பார்ப்போவரை தன் பக்கம் ஈர்த்து விடுவார் பவன் கல்யாண்.

  பெண் குழந்தைக்கு தாயான ஆலியா பட்.. ரன்பீர் -ஆலியா ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்!

  இந்நிலையில் ஆந்திராவின் குண்டூரில் தனது கட்சி தொண்டர்களுடன் காரில் பவன் கல்யாண் பேரணி சென்றுள்ளார். மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், காரின் கூரையில் உட்கார்ந்து கொண்டு இருபுறமும் தொண்டர்கள் நிற்க பவன் கல்யாண் சென்றார். அவருக்கு பின்னாலும் முன்னாலும், கார்கள் மற்றும் பைக்குகளில் தொண்டர்கள் அணிவகுத்து வருகின்றனர்.

  சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு பவனின் பேரணி அமைந்து விட்டது. இந்த வீடியோவுக்கு மாஸ் பி.ஜி.எம்.களை இணைத்து அவரது ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

  இருப்பினும், தனது ரசிகர்கள், கட்சி தொண்டர்களை பவன் கல்யாண் தவறாக வழி நடத்துகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

  எதற்காக பவன் கல்யாண் இப்படி செய்தார் என்று விசாரிக்கப்பட்டபோது, அவரது காரை மங்களகிரியில் போலீசார் மறித்து பின்னர் விடுவித்தனராம். இதனால் கோபம் அடைந்த பவன் கல்யாண், காரின் கூரை மீது ஏறிச் செல்ல ஆரம்பித்தாராம். அவரது பயணம் மாஸ்ஸாக இருந்தாலும், போக்குவரத்து விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்துள்ளது.

  இவ்வளவு களேபரத்தை முடித்து விட்டு பவன் கல்யாண் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Tollywood