கொரோனா குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பவன் கல்யாண்

கொரோனா குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பவன் கல்யாண்

பவன் கல்யாண்

கொரோனா தொற்றுக்கு ஆளான தெலுங்கின் முன்னணி நடிகர் பவன் கல்யாண், தனது ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றுக்கு ஆளான தெலுங்கின் முன்னணி நடிகர் பவன் கல்யாண், தனது ரசிகர்களுக்கு அப்டேட் தந்துள்ளார்.

  பவன் கல்யாண் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி. இன்றைய தேதியில் சிரஞ்சீவியைவிட நான்கு மடங்கு ரசிகர்களை வைத்துள்ளார். இவர் படம் வெளியாகையில் தியேட்டர் சுற்றுச்சுவர் உடையும், தடியடி நடக்கும். அந்தளவு வெறிபிடித்த ரசிகர்கள்.

  இந்தியில் பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப்பில் பவன் கல்யாண் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அந்தப் படம் கொரோனா பாதிப்பை கடந்து மகத்தான வசூலை பெற்றது. அதனை முழுமையாக அனுபவிக்கும் முன் கொரோனா தொற்றுக்கு ஆளானார் பவன் கல்யாண். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பாதிப்பின் தீவிரம் குறைந்ததால், வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தலைவருக்கு என்னானதோ என்று ரசிகர்கள் பதட்டத்துடன் அப்டேட்டுக்கு அலைவதைப் பார்த்தவர், அவராகவே தனது உடல்நிலை குறித்து அறிவித்தார்.

  உடல்நிலை தேறி வருகிறது. விரைவாக குணமடைந்து வருகிறேன். கொரோனா தொற்று ஏற்படாமல் அனைவரும் மிக கவனமாக இருங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் போதாமையாக இருப்பதாகவும், மாநில அரசு அதனை முதலில் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

  பவன் கல்யாண் இப்போது தனது பண்ணை வீட்டில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ட்ரிப்ஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு பண்ணை வீட்டிலேயே அளிக்கப்படுகின்றன. மருத்துவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர். வீட்டில் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படத்தை சில தினங்கள் முன்பு பவன் கல்யாண் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: