தனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்!

தனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்!
நடிகர் பவன்
  • Share this:
அசுரன் பட 100-வது நாள் மேடையில் குருவி படம் பற்றி பேசியதற்காக நடிகர் பவன் மன்னிப்பு கோரியுள்ளார்.

வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா, கடந்த திங்களன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் பவன், “100 நாட்கள் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது அரிதாகி விட்டன. கடைசியாக குருவி திரைப்படத்திற்கு 150 நாட்களில் வெற்றிவிழாவுக்குச் சென்றேன். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என எனக்கு தெரியவில்லை என்றார்.


இந்தப் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனது பேச்சுக்காக நடிகர் பவன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் பவன், “நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. முதலில் நான் விஜய்யிடமும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மற்றவர்களை புண்படுத்துவதற்காக நான் பேசவில்லை. நான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அப்படிப் போனாலும் என்னைப் பேசவைக்காதீர்கள் என்று சொல்லிவிடுவேன். ஆனால் நான் அசுரன் பட விழாவில் பேசியது தப்புதான். நான் பேசப்போகும் போதே இவரை பேசவிட்டால் ஏதாவது பேசிவிடுவார் என்று வெற்றிமாறனும், தனுஷும் பயப்பட்டனர். நான் அதையும் மேடையில் குறிப்பிட்டேன்.

நான் விஜய்யின் ரசிகர் தான். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது மேடையில் தான் இப்படி பேசினேன். ஆனால் குருவி படப்பிடிப்பு தளத்தில் அவர் நடித்த படங்களில் பிடிக்காத படங்களை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் என்ன படங்கள் என்பதை கேட்டு நீங்கள் சொன்னது சரிதான் என்று கூறியிருக்கிறார். அதேபோல் பிடித்த படங்களையும் அவரிடம் கூறியிருக்கிறேன்.அசுரன் வெற்றி விழா மேடையில் படம் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் தான் இவ்வளவு பிரச்னை. அதனால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பேசியதற்கு பின்னர் வெற்றிமாறனிடம் பேசினேன். அவர் தனுஷ் மிகவும் வருத்தப்பட்டதாக என்னிடம் கூறினார்” இவ்வாறு நடிகர் பவன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading