நடிகர் பசுபதியின் பிறந்த நாளான இன்று அவரை பற்றீய சிறப்பு தொகுப்பு.
நாசர் இயக்கி நடித்த 'மாயன்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை சற்று திரும்பி பார்க்க வைத்தார் பசுபதி..... ’தூள்', 'இயற்கை', 'அருள்' என பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த பசுபதிக்கு 2004 ஆம் ஆண்டு
கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த 'விருமாண்டி' பெரும் புகழை பெற்று தந்தது. இத்திரைப்படத்தில் கொத்தாள தேவனாக வாழ்ந்த பசுபதிக்கு இப்படமே திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படிங்க.. முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்? ரசிகர்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!
வில்லன் கதாபாத்திரங்கள் பசுபதியின் முன் வரிசைகட்ட ஆரம்பித்தன. திருப்பாச்சி, தூள், சுள்ளான், அருள்.. மதுர போன்ற திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக நடித்து வில்லத்தனத்தையும் வித்தியாசமாக வெளிப்படுத்தினார். பல திரைப்படங்களில் ”ஏய்”…. ”ஓய்” என சவுண்ட் உயர்த்தி கொடூர வில்லனாக நடித்து கொண்டிருந்த பசுபதியின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது, வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ திரைப்படம்..
ஒருபக்கம் குசேலனாக நடிப்பில் உருக்கம் காட்டிய பசுபதி மறுபக்கம் வெடிகுண்டு முருகேசனாய் கலகலக்கவும் வைத்தார். 18ஆம் நூற்றாண்டு மதுரை வட்டாரத்தில் வாழ்ந்த பழங்குடித் தலைவனாக ‘அரவாண்’ படத்திலும்...… கம்யூனிஸ சித்தாந்தத்தை உரக்க சொல்லிய ’ஈ’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தான் ஒரு பன்முக கலைஞன் என்பதையும் நிரூபித்தார் பசுபதி.
இதையும் படிங்க.. எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பாரதி!
'
மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்து தான் நகைச்சுவையிலும் பட்டாசு என சொன்னார் பசுபதி. அந்த வரிசையில் அமைந்தது ஒயின்ஷாப் ஓனராக, அண்ணாச்சி கதாபாத்திரத்தில் அடிக்கடி சுகர் மாத்திரை சாப்பிடும் காமிக் வில்லனாக இவர் நடித்திருந்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம்..
பா.ரஞ்சித் இயக்கத்தில்
ஆர்யா நடித்து வெளிவந்த ‘சார்பட்டா” திரைப்படத்தில் பசுபதி ஏற்றிருந்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஆனது. தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் பசுபதியின் திரைக்கள ரிங்கில் அவர் இன்னும் பெற்றிடப் போகும் வெற்றிகளுக்காக காத்திருக்கிறது தமிழ் சினிமா பரம்பரை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.