Home /News /entertainment /

Iravin Nizhal Review: எப்படி இருக்கிறது பார்த்திபனின் இரவின் நிழல் படம்?

Iravin Nizhal Review: எப்படி இருக்கிறது பார்த்திபனின் இரவின் நிழல் படம்?

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

படம் உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட அதிக சிரத்தையை, கதை உருவாக்குவதிலும் எடுத்திருந்தால் இன்னும் அதிகமாக பாராட்டப்பட்டிருக்கும் இரவின் நிழல். 

  • News18
  • Last Updated :
பார்த்திபன் நடித்த இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  அந்த படம் என்ன கூறுகிறது? எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஒத்த செருப்பு  திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை ஒரு சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறார் பார்த்திபன்.

சமூகத்தில் ஒருவனின் பசி,பசி சார்ந்த பிரச்சனை மற்றும் அவனின் கருப்பு பக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் பார்த்திபன். அத்துடன் எந்த சூழலிலும் பாவம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் என்பதை கூற முயற்சித்து இருக்கிறார்.

50 வயது மனிதனின் பல்வேறு வயது காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை Non linear  முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கின்றனர். 94 நிமிடம் 36 நொடிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது.  குறிப்பாக உடை மாற்றுவது, அடுத்த காட்சிக்காகா தயாராவது என பல்வேறு சவால்களை அவர்கள் சந்தித்துள்ளனர். இருந்தாலும் படம் Non Linear முறை என்பதால் திரைக்கதை முன் - பின் சென்று வந்தது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். அதற்காகவே அவ்வாறு படமாக்கியுள்ளார் பார்த்திபன்.

தாயை இழந்து சாப்பாட்டிற்கு இல்லாமல் கஷ்டப்படும் சிறுவனை வாழ்க்கை தொடங்கி, சினிமா திரைப்படங்களுக்கு Finance செய்யும் அளவுக்கு உயரும் பார்த்திபனின் பயணம் எப்படி இருந்தது? அவன் மனநிலை என்ன? ஏன் அந்த முடிவை எடுக்கிறான்? என்பதற்கான காட்சிகள் இருந்தாலும், அவை படம் பார்ப்பவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் சினிமாவிற்கு Finance செய்யும் கதாபாத்திரமும் அதற்கான காட்சிகளும் சினிமா துறையில் உள்ள ஒரு பிரபல Financier-ஐ நினைவுபடுத்துகிறது.

இந்தப் படத்தில் பெரும்பாலும் பார்த்திபனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது! பேசிக் கொண்டே இருக்கிறார்!! அது படம் பார்ப்பவர்களுக்கு சோர்வை கொடுக்க வாய்ப்புள்ளது.
இரவின் நிழல் படம் 94 நிமிடம் 36 நொடிகள் மட்டுமே என்பதால் இடைவேளை கிடையாது. இதன் காரணமாக, படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதல் பாதியாக 20 நிமிடம்  உருவாக்கியுள்ளார் பார்த்திபன். அதில் இடம்பெறும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர்.

Also read... இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

மேலும் அது, ஒரே ஷாட்டில் படம் எடுப்பது எவ்வளவு கடினம்? நடிகர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள் எந்த அளவிற்கு சிரமப்பட்டார்கள்? என்பதை நம்முள் புகுத்தி விடுகிறது.  அத்துடன் படம் உருவாக்கிய முறையை பார்த்து விட்டு, படத்தை பார்க்கும் பொழுது அதில் பல மைனஸ்கள் இருந்தாலும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட படம் பாராட்டலாம் என தோன்ற வைக்கிறது. அதை ஒரு யுத்தியாக பார்த்திபன் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.

இந்தப் படத்தின் கதை முக்கியத்துவத்தை விட,  சாதனை முயற்சிக்காக ஒரே ஷார்ட்டில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் இயக்குநர் பார்த்திபன் அதிக கவனம் செலுத்திருக்கிறார். அவரின் முயற்சிக்கு 350 தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. குறிப்பாக கிம்பல் என்று அழைக்கப்படும் கேமரா ஆப்ரேட்டர் ஆகாஷ் மற்றும் Focus புல்லர் ராஜேஷ் - சங்கர்  ஆகியோரின் உழைப்பு பாராட்டதக்கது. அதேபோல் கலை இயக்குநரின் பங்கும் மிக முக்கியமானது.

பார்த்திபன் எடுத்த முயற்சிக்கும், அவரின் கனவிற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதுணையாக இருந்துள்ளார். அவரின் இசை 96 நிமிட படம் நகர்வதற்கு உதவியுள்ளது.
முயற்சி, முயற்சி என்பதற்காக மட்டுமே இரவின் நிழல் படத்தை எடுத்தது போல் இருக்கிறது. இன்னும் கதையில் சற்று கவனம் செலுத்தி, அதில் இருக்கும் பாதிப்பை காட்சிகளாக பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது இரவின் நிழல். அத்துடன் குழந்தைகளுடன் படத்தை பார்க்க வாய்ப்பு இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Parthiban, Movie review

அடுத்த செய்தி