TN Election 2021: ’ஐந்தாண்டு கால குத்தகை’ தேர்தல் குறித்து பார்த்திபன் ட்வீட்!

TN Election 2021: ’ஐந்தாண்டு கால குத்தகை’ தேர்தல் குறித்து பார்த்திபன் ட்வீட்!

பார்த்திபன்

நாளை தேர்தல் நடைப்பெறவிருக்கும் நிலையில், அது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

  • Share this:
    நாளை தேர்தல் நடைப்பெறவிருக்கும் நிலையில், அது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பணிகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 26,7446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என இந்தத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

    இருப்பினும் அதிமுக மற்றும் திமுக-வுக்கு இடையே தான் தீவிரப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிக மெனக்கெட்டு வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர், வாஷிங் மெஷின் என இதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறது.



    அதே நேரத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் அரியணை ஏற முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலை இப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி எதிர்கொள்கிறது. எனவே அவர் தனது ஆளுமையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக வேட்பாளர்கள் தேர்வையும், தேர்தல் அறிக்கையையும் மிகவும் கவனமாக கையாண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை 7 மணியோடு தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டரில், “நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

    தேர்தல் குறித்தும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவிடுகையில் கவனமாக ஆழ்ந்து யோசித்து போட வேண்டும் எனவும், நாளை ஒருநாள் அடுத்த 5 ஆண்டுகளுக்குமான குத்தகை எனவும் அவர் அந்தப் பதிவின் மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: