ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தான் இறந்ததாக வெளியான வதந்தி... பார்த்திபன் நச் பதிவு!

தான் இறந்ததாக வெளியான வதந்தி... பார்த்திபன் நச் பதிவு!

பார்த்திபன்

பார்த்திபன்

நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தான் இறந்துவிட்டதாக வந்த வதந்திக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகரான அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் புதிய முயற்சிகளை கையாளும் பார்த்திபன், வித்தியாசமான படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றார். இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது. சமீபத்தில் இரவின் நிழல் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

இதற்கிடையே சில தினங்கள் முன்பு சென்னை புத்தக கண்காட்சியில், சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார் பார்த்திபன். அவரது இந்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தான் இறந்து விட்டதாக வதந்தி வெளியிட்ட யூ-ட்யூப் சேனலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.

வினய்யுடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை?

நடிகர் பார்த்திபன் சற்று முன் திடீர் மரணம் என்ற வதந்திக்கு, “நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்!” என பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Parthiban