நன்மையே நடக்கும்... ‘800’ பட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது பார்த்திபன் நம்பிக்கை

‘800’ பட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீதான நம்பிக்கையை பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.

நன்மையே நடக்கும்... ‘800’ பட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது பார்த்திபன் நம்பிக்கை
துக்ளக் தர்பார் பட ஸ்டில்
  • Share this:
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் நடிப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக முத்தையா முரளிதரனும், தயாரிப்பு நிறுவனமும் விளக்கமும் அளித்துள்ளனர்.


மேலும் படிக்க: ‘800’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி?

இந்த நிலையில் விஜய் சேதுபதி என்ன முடிவெடுக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் பார்த்திபன், “முத்தையா முரளியின் சூழல் பந்தை,
ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி...

எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக பவுன்ஸ் ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து பவுண்டரியைத் தாண்டி சிக்சராக விளாசி, (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் சியர் கேர்ள்ஸ் போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வன்ந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம். (காலங்காத்தால...)நடப்பது நன்மையே. அதனால் நன்மையே நடக்கும் என நம்புவோம்.” இவ்வாறு நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading