Home /News /entertainment /

உலகத்தில் முதலாவதாக தமிழன் எதையும் செய்யக்கூடாது என்று தமிழனே நினைக்கிறான் - பார்த்திபன்

உலகத்தில் முதலாவதாக தமிழன் எதையும் செய்யக்கூடாது என்று தமிழனே நினைக்கிறான் - பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்

உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் செய்யக்கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்றால் இதைவிட மோசமான காரியம் இல்லை என்றும் தெரிவித்த அவர் எதையும் நாம் செய்ய முடியாது, வெளிநாட்டினவர் மட்டுமே செய்ய முடியும் என நம்புகின்றனர்.

  • News18
  • Last Updated :
உலகத்தில் முதலாவதாக தமிழன் எதையும் செய்யக்கூடாது என்று தமிழனே நினைக்கிறான் என்று நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் இரவின் நிழல் வெளியான புரவின்ஸ் மால் திரையரங்திற்கு நடிகர் பார்த்திபன் வருகை தந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கிற்குள் நுழைந்த நடிகர் பார்த்திபன் மற்றும் திரைப்பட கதாநாயகி பிரிகிடா ஆகியோரை கண்டதும் ரசிகர்கள் செல்பி எடுத்தபடி முண்டியடித்து சென்றனர். திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் அரங்கிற்குள் நுழைந்த பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை சில நிமிடங்கள் பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் பார்த்திபன் கூறும் பேசும் போது, பாண்டிச்சேரி ரசிகர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தை கலைப்புணி தானு வெளியிட்டுள்ளார். இப்படம் வெளியான மூன்று நாட்களில் நல்ல வசூலை அடைந்துள்ளது. பெரிய கமர்சியல் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. திரையரங்குகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இத்திரைப்படம் நாம் பார்த்து பார்த்து பழகிய சினிமா கிடையாது. இது நான் லீனியர் (Non-Linear) என்று சொல்லக்கூடிய சிங்கிள் ஷாட் சினிமா உலகிலேயே இதுதான் முதன் முறையான நான் லீனியர் சினிமா.

இம்மாதிரியான திரைப்படங்கள் திரைப்பட உலகத்திற்கு மிகவும் நல்லது,  தாய்மார்கள் அனைவருக்கும் திரைப்படம் பிடித்துள்ளது. இத்திரைப்படத்தில் சில விஷயங்களை உள்ளது உள்ளபடியாக சொல்லி இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் புதிய பாதைக்கு அடுத்தபடியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு இத்திரைப்படம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

Also read... 30 வயதில் 60 வயது வேடங்களில் கலக்கிய எஸ்.வி.ரங்கா ராவ்

உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் செய்யக்கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்றால் இதைவிட மோசமான காரியம் இல்லை என்றும் தெரிவித்த அவர் எதையும் நாம் செய்ய முடியாது, வெளிநாட்டினவர் மட்டுமே செய்ய முடியும் என நம்புகின்றனர். நம்மிடம் அனைத்து திறமையும் உள்ளது நாம் எதையும் செய்யலாம் என்று பார்த்திபன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Parthiban, Entertainment

அடுத்த செய்தி