பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பார்த்திபன்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

news18
Updated: July 28, 2019, 12:19 PM IST
பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பார்த்திபன்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் மணிரத்னத்துடன் பார்த்திபன்
news18
Updated: July 28, 2019, 12:19 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளார்.

செக்கச் சிவந்த வானம் படத்துக்கு பிறகு பொன்னியின் செல்வம் நாவலைத் திரைப்படமாக இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் அவர் வெளியிடவில்லை.

இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில் பெருங்களிப்பில்' பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக Spelling (ஸ்பெல்லிங்) மட்டுமே கற்றிருந்த நான் Swimming (ஸ்விம்மிங்) கற்கிறேன்!” என்று கூறியுள்ளார்.நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: பாகுபலி படத்தின் கதை காப்பியா?

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...