Home /News /entertainment /

கண்ணைப் புடுங்கி காயலாங்கடையில வித்திடறாங்க - பார்த்திபன் ட்வீட்

கண்ணைப் புடுங்கி காயலாங்கடையில வித்திடறாங்க - பார்த்திபன் ட்வீட்

பார்த்திபன்

பார்த்திபன்

பார்த்திபன் தனது படம் குறித்த தகவல்களை பெரும்பாலும் முகநூலில் தான் வெளியிடுகிறார். அதனை முடக்குவது அவரது பணிகளை முடக்குவது போல.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப் புடுங்கி காயலாங்கடையில வித்துட்டுப் போயிட்றாங்க என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.

அனைத்தையும் அதன் போக்கில் எடுத்துக் கொள்கிறவர் பார்த்திபவன். அவரையே இப்படி வருத்தப்பட்ட பார்த்திபனாக மாற்றிய பாவிகள் யார்? வேறு யார், இணைய ஹேக்கர்கள்தான்.

இணையத்தில் இயங்குகிற திரைநட்சத்திரங்களில் பார்த்திபனும் ஒருவர். இரு தினங்கள் முன்பு யாரோ அவரது முகநூலை ஹேக் செய்திருக்கிறார்கள்.

'என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால் அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள்.

அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்' என ட்வீட் செய்திருந்தார்.



இது நடந்த பிறகு ஒருவழியாக கணக்கை மீட்டிருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை போட்டுள்ளார்.



' முழுச்சிகிட்டிருக்கும் போதே

கண்ணப் புடுங்கி காயலாங்கடையில வித்துட்டுப் போயிட்றாங்க-bad hackers!’கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி-எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ?’இரவின் நிழலில் நான் எழுதிய பாடல் வரிகள்.

திரும்ப கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி.

இனி

இனிதே

நட்பு தொடரும்…'

- என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... வலிமை படத்துடன் மோதலை தவிர்த்த விஷாலின் வீரமே வாகை சூடும்

பார்த்திபன் தனது படம் குறித்த தகவல்களை பெரும்பாலும் முகநூலில் தான் வெளியிடுகிறார். அதனை முடக்குவது அவரது பணிகளை முடக்குவது போல. கண்ணைப் பிடுங்குவது போல என்ற அவரது உதாரண வரிகள் அவரளவுக்கு சரிதான்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Parthiban

அடுத்த செய்தி