Home /News /entertainment /

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘இரவின் நிழல்’

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘இரவின் நிழல்’

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பார்த்திபன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பல்வேறு விருதுகளை குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க.. இயக்குனராக ஒரே வருடத்தில் நான்கு ஹிட் கொடுத்த பாக்யராஜ்

சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மற்ற படங்களை விட, இரவின் நிழல் படத்தின் போஸ்டரில், ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கியதை குறிப்பிடும் வகையில் அகாடமி அவார்டு வின்னர் என்று ஏ.ஆர்.ரகுமானை பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.



விரைவில் திரையரங்குகளில் இரவின் நிழல் படம் வெளியாகவுள்ள நிலையில்,  கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.

இதையும் படிங்க.. தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?

இதுதொடர்பான அறிவிப்பை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில்  என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்.’ என்று கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Parthiban

அடுத்த செய்தி