Actor Pandu: எழுத்தில் பேர் வாங்கிய நடிகர் பாண்டு!

நடிகர் பாண்டு

நந்தனம் பெரியார் பில்டிங்குல இருக்குற உலோக எழுத்துகள் நான் வடிவமைச்சதுதான்.

  • Share this:
    தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளார்.

    1947-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் பிறந்த இவர், ஓவியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஓவியக் கல்லூரியில் பயின்ற பாண்டுவை, நடிகர் என சுருக்கி விட முடியாது. ஓவியர், பிஸினெஸ்மேன், நகைச்சுவை பேச்சாளர் என இவருக்கான அடையாளங்கள் நிறைய உண்டு.

    கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கிய பாண்டு பெயர் பலகைகளை எழுதிக் கொடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இன்னும் சுவாரஸ்யமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது.

    இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த பாண்டு, ’எம்.ஜி.ஆர், தி.மு.க-வை விட்டுப் பிரிஞ்சு, தனிக்கட்சி ஆரம்பிச்சப்போ, அரசியல் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அடுத்து என்னனு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. நான் அங்கே ஒரு ஓவியனா கட்சியின் கொடியை வடிவமைச்சுக் கொடுத்தேன். அ.தி.மு.க கொடி நான் வடிவமைச்சது தான். அதுக்கப்புறம் மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன் முதலா நான் தான் சென்னையில் அறிமுகம் செஞ்சேன்.

    நந்தனம் பெரியார் பில்டிங்குல இருக்குற உலோக எழுத்துகள் நான் வடிவமைச்சதுதான். அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. `எழுத்துன்னா அது பாண்டு தான்’னு நல்ல பேர் வாங்கினேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

    74 வயதான பாண்டுவுக்கு குமுதா என்ற மனைவியும், பிரபு, பஞ்சு, பின்டு என 3 மகன்களும் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: