முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''விஜய் முதல்ல அவரோட அப்பா, அம்மா கிட்ட பேசட்டும், அமெரிக்கா வரைக்கும் செய்தி வருது'' - நடிகர் நெப்போலியன் அதிரடி

''விஜய் முதல்ல அவரோட அப்பா, அம்மா கிட்ட பேசட்டும், அமெரிக்கா வரைக்கும் செய்தி வருது'' - நடிகர் நெப்போலியன் அதிரடி

விஜய் - நெப்போலியன்

விஜய் - நெப்போலியன்

இவ்வளவு நாள் இடைவேளைக்கு பிறகு விஜய் என்னிடம் பேச தயாராக இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. நான் பேசுவதற்கு தயார் அவர் தயாரா? என்று கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'வாரிசு' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது 'தளபதி 67' படத்துக்காக தயாராகிவருகிறார். இந்தப் படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று லோகேஷ் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்தார். விக்ரம் படம் துவங்குவதற்கு முன் டீசர் வெளியிடப்பட்டது போல, 'தளபதி 67' படத்துக்கும் டீசர் வெளியாகலாம் என்றும் அதற்கான படப்பிடிப்பு தான் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் விக்ரமும் இந்தப் படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, நண்பன், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் குறித்து நடிகர் நெப்போலியன் பேசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அதில், ''போக்கிரி படத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. நானும் விஜய்யும் பேசிக்கிறது இல்ல. அவர் படங்கள் எதையும் பார்க்கிறது இல்ல. விஜய் ரெடினா நானும் பேசுறதுக்கு ரெடி, இதை நீங்க விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏன்னா விஜய் அவரோட அப்பா அம்மா கிட்டயே பேசமாட்றாரே.

விஜய் தன்னோட அப்பா அம்மா கிட்டயே பேசிக்கிறது இல்லனு எல்லோரும் சொல்றாங்க. அமெரிக்கா வரை செய்தி வந்திருக்கு. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது. முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும். எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 வருஷங்களாச்சு. இவ்வளவு நாள் இடைவேளைக்கு பிறகு விஜய் என்னிடம் பேச தயாராக இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. நான் பேசுவதற்கு தயார் அவர் தயாரா என்று கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay