ஹாஸ்பிடல் சீனில் கூட மேக்கப் போட்டு கொண்டு நடிப்பதாக நடிகை நயன்தாராவை நடிகை மாளவிகா மோகனன் விமர்சித்திருந்த நிலையில் நயன்தாரா அதற்கு விளக்கமளித்துள்ளார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகை நயன்தாரா சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நடிக்கத் தொடங்கிய காலம் முதல் தற்போது வரை தன்மீது விமர்சனங்கள் எழுந்துகொண்டே இருப்பதாக கூறினார். மேலும், உடல் எடை, தோற்றம் என அனைத்து விஷயங்களிலும் தான் அதிகளவில் கேள்விக்குள்ளாக்கப்படுவதாக கூறினார். தமிழ் சினிமாவில் தற்போது பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகவும் நயன்தாரா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு இண்டெர்வியூவில் நடிகை ஒருவர் என் பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். நான் மருத்துவமனையில் இருக்கும் காட்சியில் கூட முடி கலையாமல் நடித்திருந்ததாக தெரிவித்தார். அப்படியெல்லாம் கமர்ஷியல் படங்களில் நடிக்க முடியாது. அந்த படத்தின் இயக்குநர் அப்படிதான் நடிக்க சொல்லியிருந்தார். படத்திற்கு ஏற்றார் போல் இது மாறுபடும்” என தெரிவித்தார்.
She has a reply to everyone and everything. Don't mess with her#Nayanthara #Nayanatara #MalavikaMohanan pic.twitter.com/Sj1ph77Z8t
— V🔑/#Connect dayy/ (@Nayanfan1003) December 21, 2022
இதற்கு முன்னர் நடிகை மாளவிகா மோகனன் ஒரு இண்டர்வியூல், “ஒரு சூப்பர் ஸ்டார் கதாநாயகி இருக்கிறார். அவர் மருத்துவமனை காட்சியில் கூட முடி கலையாமல், லிப் ஸ்டிக் போட்டுக்கொண்டு நடிக்கிறார்” என கூறியிருந்தார்.
இருவரும் பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்யவில்லை என்றாலும், சமூகவலைதளங்களில் இருவர் பேசும் வீடியோவை கேள்வி பதில் போல் ஒன்றாக சேர்த்து பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Malavika Mohanan, Nayanthara