Home /News /entertainment /

நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகும் 'கூறாய்வு'… பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்

நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகும் 'கூறாய்வு'… பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்

கூறாய்வு பட பூஜையின்போது இயக்குனர் பாரதி ராஜா, நட்டி நட்ராஜ்.

கூறாய்வு பட பூஜையின்போது இயக்குனர் பாரதி ராஜா, நட்டி நட்ராஜ்.

Kooraivu Movie : படத்திற்கான பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று சிறப்பித்துள்ளார். இந்த படத்தில் நட்ராஜுடன் சுப ப்ரியா மலர், மனோபாலா, போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு கூறாய்வு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தவர் நட்டி நட்ராஜ். இவரது ஒளிப்பதிவில் புலி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் வெளிவந்துள்ளன.

    இருப்பினும் நட்ராஜ் நடிகராகவே பலராலும் அறியப்படுகிறார். கடந்த 2002-ல் இருந்து இவர் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்கத்தில் கடந்த 2014-ல் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனார்.

    கடைசியாக 2021-ல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் போலீஸ் எஸ்.பி. கண்ணபிரான் என்ற கேரக்டரில் நட்டி நட்ராஜ் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் திரையில் இவரைப் பார்த்தாலே ரசிகர்கள் கோபம் கொள்ளும் அளவுக்கு இவரது நடிப்பு அமைந்திருந்தது.

    also read  : வேற லெவல் ஹாட் லுக்கில் ஜான்வி கபூர்.. வைரல் போட்டோஸ் 

    இந்நிலையில் நட்ராஜின் அடுத்த படமாக ‘கூறாய்வு’ உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ! 

    படத்திற்கான பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று சிறப்பித்துள்ளார். இந்த படத்தில் நட்ராஜுடன் சுப ப்ரியா மலர், மனோபாலா, போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    Also read... ஜெயிலர் படத்துக்காக அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்... எத்தனை கோடிகள் தெரியுமா?  

    அந்தோனி சாமி இந்த படத்தை இயக்கவுள்ளார். ஒளிப்பதிவை கிறிஸ்டோபர் ஜோசபும், எடிட்டிங்கை முத்து முனியசாமியும் மேற்கொள்ளவுள்ளனர்.

    க்ரைம் த்ரில்லர் ஜேனரில் கூறாய்வு படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி