Home /News /entertainment /

தெலுங்கு படப்பிடிப்பில் நடிகர் நாசருக்கு காயம்!

தெலுங்கு படப்பிடிப்பில் நடிகர் நாசருக்கு காயம்!

நாசர்

நாசர்

நடிகர் நாசருக்கு படப்பிடிப்பில் காயம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஸ்பார்க் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டடுள்ளது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் நாசர் தற்போது ஸ்பார்க் என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்பு தெலுங்கானா போலீஸ் அகாடமியில்  நடைபெற்றது. அதில் நாசருடன் நடிகைகள் சுகாசினி, மெக்ரீன்,  நடிகர் சியாஜி ஷிண்டே உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சி படமாக்கப்பட்டது.

சீரியல் ஆடிஷனுக்கு போய் திருப்பி அனுப்பப்பட்ட பிக் பாஸ் ராஜூ!

அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.  இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பாக நாசரை தொடர்பு கொண்டு பேசியபோது, நலமாக இருப்பதாகவும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Nasser, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி