நடிகர் நாசர் நடிப்புலகை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வருகின்றன.
தென்னிந்தியாவின் முக்கிய நடிகரான நாசர், ‘பாகுபலி’ படத்தில் நடித்தப் பிறகு இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். அவர் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவி வருகிறது.
உடல்நல பிரச்னைகளால் அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, இதயம் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டார் நாசர். அதனால் அவர் தனது நடிப்பு வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாசர், தான் சினிமா துறையில் இருந்து விலகப்போவதாக கூறியதாக கூறப்படுகிறது.
சந்தோஷமா இருங்க, நேர்ல மீட் பண்ணுவோம் - ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஜித்!
அவர் நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணியாற்றியது பலருக்கும் தெரியாது. பின்னர் நடிப்பில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட நாசர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் திரைப்பட நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நாசர் 1985-ல் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘கல்யாண அகத்திகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1987-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் நாசர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.