Home /News /entertainment /

இந்த எளிய நடிகனை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் உணர்ச்சி கடிதம்!

இந்த எளிய நடிகனை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் உணர்ச்சி கடிதம்!

மு.க.ஸ்டாலின் - நாசர்

மு.க.ஸ்டாலின் - நாசர்

“கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள்.

    ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழுவில் தன்னை உறுப்பினராக இடம்பெறச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்கான விருதுகளை தேர்வு செய்யும் குழுவின், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படவிருக்கின்றனர்.

    இந்த தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் சாதனையாளருக்கு ரூ.10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை அரசியல் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் மாபெரும் பங்காற்றிய கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளன்றும் இவ்விருது வழங்கப்படவுள்ளது.

    இசையமைப்பாளருடன் ரிலேஷன்ஷிப்பில் முன்னாள் மனைவி - ரியாக்ட் செய்த ’வீரம்’ பாலா

    இந்த விருது குழுவில் தன்னை இடம்பெறச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் நாசர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பேச ஆரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக் காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Nasser, MK Stalin

    அடுத்த செய்தி