பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் மகனான நரேஷ் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். நடிகர் விஜய் நிர்மலாவை மறைந்த நடிகர் கிருஷ்ணா திருமணம் செய்துகொண்ட வகையில் இவர் மகேஷ் பாபுவுக்கு சகோதரர் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் சரத்குமாரின் சண்டமாருதம் உள்ளிட்ட சில படங்களில் நரேஷ் நடித்துள்ளார். நரேஷ் 3 முறை விவாகரத்தானவர். 58 வயதாகும் நரேஷ், கன்னட நடிகை பவித்ரா லோகேஷும் நீண்ட நாட்களாக காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சம்மோகனம் படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் தெலுங்கில் அந்தரு பாகுண்டாலி, மிடில் கிளாஸ் அப்பாயி, டூட்டி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பவித்ரா லோகேஷ் தமிழில் அயோக்யா, கா.பெ.ரணசிங்கம், கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். கடந்த வருடம் ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருந்ததாகவும் அப்போது நரேஷின் மனைவி ரம்யா ரகுபதி கூச்சலிட்டு செருப்பை வீசி எறிந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பவித்ராவும் ஏற்கனவே விவாகரத்தானவர். இந்த நிலையில் நரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் கேக் வெட்டி முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ''புத்தாண்டு வாழத்துகள். புதிய துவக்கம். உங்கள் ஆசிர்வாதம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் திருமணம் நடைபெற்றதை தான் அவர் அறிவித்திருக்கிறார்'' என்று கூறப்படுகிறது.
இந்த வயதில் இது தேவையா? என சமூக வலைதளங்களில் இருவரது செயலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றன. மற்றொருபக்கம் காதலுக்கு வயதில்லை, இது அவர்கள் வாழ்க்கை, வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது என ஆதரவு குரல்களும் கேட்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Viral Video