Vikram: ’விக்ரம்’ படத்தில் கமல் ஹாசனுடன் இணையும் மகிழ்ச்சியில் நரேன்!

நரேன்

லோகேஷ் கனகராஜ் ’விக்ரம்’ பட அறிவிப்பை வெளியிட்ட போது, அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் நரேன்.

  • Share this:
    விக்ரம் படத்தில் நாளுக்கு நாள் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்தபடி இருக்கிறார்கள். ’சித்திரம் பேசுதடி’ நாயகன் நரேன் புதிதாக படத்தில் இணைந்துள்ளார். இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றிய தகவலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    மிஷ்கினின் ’சித்திரம் பேசுதடி’யில் அறிமுகமான நரேன், அவரது ’அஞ்சாதே’, ’முகமூடி’ படங்களில் நடித்தார். அஞ்சாதே படமே நரேன் இதுவரை தமிழில் நடித்ததில் மிகச்சிறந்த படமாக உள்ளது. அதன் பிறகு நீண்ட நாள்களாக நல்ல வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான், லோகேஷ் கனகராஜ் தனது ’கைதி’ படத்தில் அவரை நடிக்க வைத்தார். போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை நரேன் கைதியில் வெளிப்படுத்தியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லோகேஷ் கனகராஜ் ’மாஸ்டர்’ படத்தை முடித்து, ’விக்ரம்’ பட அறிவிப்பை வெளியிட்ட போது, அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் நரேன். அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ், ’விக்ரம்’ படத்தில் உங்களுக்கும் ஒரு வேடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். "பல நடிகர்களைப் போல கமல் படங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நான். இப்போது அவர்கூடவே நடிக்கயிருப்பது கனவு போல் உள்ளது" என்று உணர்ச்சிவசப்படுகிறார் நரேன். இவர் மட்டுமல்ல, இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: